மாசிலாமணீஸ்வரர் சன்னிதி
ADDED :3556 days ago
திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் சன்னிதியில், திருஞானசம்பந்தர் பெருமான் தன் தந்தையார் செய்யும் வேள்விக்குப் பொருள் வேண்டி, நந்தி பீடத்தருகில் நின்று இடரினம் தளரினும் எனும் திருப்பதிகம் பாடிட, இறைவன் அவருக்குப் பொற்கிழி தந்தருளினார். இந்த நிகழ்ச்சியைத் திருநாவுக்கரசரும் தம் தேவாரத்தில் குறித்துள்ளார். அந்த நந்திபீடமருகே பலர் பொருள் வேண்டி தங்களிடமுள்ள பொருளை வைத்துப் பதிகம் பாடி எடுக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.