பிரமாண்ட நந்தி!
ADDED :3556 days ago
108 சிவதலங்களுள், ஜடாயு ராவணனுடன் போரிட்டு மடிந்த, லெபாக்ஷி என்ற இடமும் ஒன்று என ஸ்கந்த புராணம் கூறுகிறது. இங்கு ஆமை வடிவில் காட்சியளிக்கும் குமாரசைலம் என்ற மலை மீது வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. 1530 ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில், வண்ண ஓவியங்கள், கடவுள், துறவிகள், மிருகங்களின் சிற்பங்கள், சிவனின் 14 வகை உருவங்கள் ஆகியவற்றால் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறது. இங்கு பிரதான தெய்வமான வீரபத்திரர் கபால ஓடுகளை மாலையாக அணிந்து, கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி கம்பிரமாகக் காட்சியளிக்கிறார். மகேஸ்வரர் உமா கோயில் உள்ளது. இது பெரிய பாறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வேறு எங்கும் காண முடியாத அற்புதக் கோலத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 20 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட நந்தி சிலை இங்கு அமைந்திருப்பது தனிச்சிறப்பு.