சிறப்பு வாய்ந்த ஆண் நதி
சப்த நதிகளில் நர்மதை தனிச்சிறப்பு வாய்ந்தது. மற்ற ஆறு நதிகள் பெண்களாகவும், நர்மதை மட்டும் ஆண் நதியாகவும் போற்றப்படுகின்றது. நர்மதையை தரிசித்த மாத்திரத்தில் சகல வினைகளும் நீங்கும் என்றும், கங்கையைவிட இது சிறந்தது என்றும் புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் நர்மதா ஆற்றங்கரையில் ஓங்காரேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை திருவாப்புடையார் கோயில் இறைவனுக்கு ஒரு நெய்தீபம் ஏற்றினால் 1000 பசுதானம் செய்த பலனும், ஒரு இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் உண்டாகும் என்பதும் ஐதிகம்! தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் வடுவூர் கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரார்த்தனை செய்துகொள்பவர்களுக்கு பெற்றோர் சொல் கேட்டு நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள் என்பதும், இக்குழந்தைகள் தர்ம சிந்தனையுடன் வளர்வார்கள் என்பதும் நம்பிக்கை.