பஞ்சபூத தத்துவ சிவவழிபாடு
ADDED :3556 days ago
சிவபூஜையில் பயன்படும் பொருட்களை ஐவகையாகப் பிரிப்பர். பழம், சந்தனம், கிழங்கு முதலியவற்றைக் கொண்டு வழிபடுவது பூமி மூல உபசாரம் என்றும், பால், தயிர், தண்ணீர், இளநீர் இவற்றால் அபிஷேகம் செய்வது அப்பு மூல உபசாரம் என்றும், ரத்தினம், கற்பூரம், தீபம் முதலியவற்றால் ஆராதிப்பது நெருப்புமூல உபசாரம் என்றும், தூபமிடுதல், சாமரம் வீசுதல் போன்றவை காற்று மூல உபசாரம் என்றும், பாடுதல், வாத்யம், இசைத்தல் போன்றவை ஆகாச மூல உபசாரம் என்றும் கருதப்பட்டு பஞ்சபூத தத்துவ அடிப்படையில் சிவவழிபாடு நடைபெறுகிறது.