சிவராத்திரி வழிபாடு ஏன்?
ADDED :3555 days ago
ராத்ரா என்று சொல்லிலிருந்து ராத்திரி என்ற சொல் வந்தது. ராத்ரா என்பதற்கு மூலச் சொல் ராதன என்பதாகும். இதற்கு அளித்தல் என்பது பொருளாகும். உழைத்துக் களைத்த உயிர்களுக்கு சுகத்தையும் ஓய்வையும் தரும் நேரமே ராத்திரி எனப்பட்டது. மேலும் இதற்குரிய நுண்பொருள் விளக்கம், உலக உயிர்களுக்கு ஒப்பற்றதாகிய மோட்சத்தை அளிப்பது என்பதாகும். இப்படி அளிப்பவர் சிவபெருமான் ஆதலின், அவர் பெயரால் இது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரி வழிபாட்டின் பயன்- இவ்வுலகில் வாழும்போது அனைத்து நன்மைகளை அடைவது, அதைத் தொடர்ந்து சிவலோக வீடுபேறு பெறுவதுமே ஆகும்.