உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனும் சிவராத்திரியும்

எமனும் சிவராத்திரியும்

சிவராத்திரி வேளையில் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் உதைபடுவது. சிவராத்திரியில் வேடன் விழித்திருந்து வில்வக் கிளையை உதிர்த்ததால் சிவலோகம் செல்ல அதனைத் தடுக்கவந்த எமன் உதைபடுவது பின்னாளில் அவனுக்கு சிவராத்திரி மகிமை உரைக்கப்படுவது போன்றவை சிவராத்திரி கதைகளில் காணப்படும் பொது அம்சமாகும். திருவைகாவூர்ப் புராணத்தில் யமன் விமோசன சருக்கம் என்ற ஒரு பகுதியும் உள்ளது. இதனை நோக்க, சிவராத்திரியின் அடிப்படைக் கருத்து ஆன்மாவானது தனது வினைகளை நீக்கிக்கொண்டு எமவாதனையை அகற்றி சிவபெருமானுடன் ஐக்கியமாவதேயாகும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவதும் இங்கு எண்ணத்தக்கதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !