உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருத்திர சிவராத்திரி

உருத்திர சிவராத்திரி

சிவனுடைய அருளே சக்தி. சக்தியின் அருளினால்தான் இந்த உலகம் தழைக்கின்றது. சிவபெருமானிடத்தில் சக்தி ஒடுங்கியிருக்கும் காலத்திலும், அவள் அவரைவிட்டு நீங்கும் காலத்திலும் உலகம் செயல்படாமல், எங்கும் இருள்சூழ்ந்து அந்தகாரமாகிவிடும். கந்த புராணத்தில் உமை நீங்கு படலத்தில் இத்தகைய காட்சியொன்று உள்ளது. ஒருசமயம் உமாதேவியர் கயிலையைவிட்டு நீங்கினாள். அதனால் உலகம் செயற்படவில்லை. சூரிய சந்திரர்களிலும் நட்சத்திரக் கூடத்திலும், தீயிலும் ஒளி மறைந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. பிரம்மனும் திருமாலும் சோர்ந்து மயங்கினர். அந்த நீண்ட பொழுதில் நான்கு காலங்களிலும் சில அம்சமாகத் தோன்றிய பதினோரு கோடி உருத்திரர்கள் சிவபெருமானைப் போற்றி அர்ச்சித்தவர். அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்கமே திருவிடைமருதூரில் இப்போது மகாலிங்க மூர்த்தியாகக் காட்சியளிக்கிறது. சிவபெருமான் அவர்களுடைய பூஜையை ஏற்றுக்கொண்டு மூன்றாவது பூஜைவேளையில் சிவலிங்கத்தினின்று ஜோதி வடிவாக வெளிப்பட்டார். அவர்களின் வேண்டுகோளின்படி முன்போலவே உலகைப் படைத்தும் அனைத்து உயிர்களும் இன்பமுற்றன. உருத்திரர்கள் வழிபட்ட அந்நாளே சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !