உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உமா சிவராத்திரி

உமா சிவராத்திரி

உமையவள் ஓர் ஊழிக் காலத்தின் நீண்ட இரவு முழுவதும் சிவனைப் பூஜித்தாள். அதனை நினைவூட்டவே சிவராத்திரி கெண்டாடப்படுகிறது என்று சில புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் உமாதேவியைத் தன் மடிமீது அமர்த்திக்கொண்டு அவளுக்கு ஆகமங்களின் நுண்பொருளை விளக்கிய காலமும் சிவராத்திரியேயாகும். அவள் பெயரால் அமைந்த சிவராத்திரிக்கு உமா சிவராத்திரி என்று பெயர். ஓர் இரவின் நடுவிலுள்ள இரண்டு யாமங்களே (இரவு 9.00 மணிமுதல் பின்னிரவு 3.00 மணிவரை உள்ள காலம்) நடுநிசி எனப்படும். இதில் மூன்றில் இரண்டு பாகம் வரை திரயோதசியும், எஞ்சிய ஒருபகுதியில் சதுர்த்தசியும் கூடிவரும் நாளை உமாசிவராத்திரி என்பர். இது மிக உயர்ந்த பலனைத் தருவதாகும்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !