உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதி என்ன பொருள்!

பதி என்ன பொருள்!

பதி என்பதற்குக் கர்த்தா எனவும், கடவுள் எனவும், முழு முதல் எனவும், சிவம் எனவும் பொருள் கூறலாம். இதில் கூறப்படும் கடவுளுக்கும், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற மூன்றில் ஒருவனாகக் கூறப்படும் கடவுளுக்கும் வேறுபாடு உண்டு. இம்மூவர்களுக்கும் முழுமுதற் கடவுளே காரணமாவர். கடவுளைச் சகுணர் எனவும். நிர்க்குணா எனவும் கூறுவர். நிர்க்குணக் கடவுள் குறியும், குணமும், தொழிலும், உருவமும் இல்லாமல் எல்லாவற்றிற்கும் புறம்பாக நிற்கிறார். அப்போது அவரை அகளர் எனவும் கூறுவர். (அகளம் - நிர்க்குணம்) அகளமாய் நின்ற அறிவரும் அப்பொருளே சகுணமாகி அருளால் வருகின்றது. அது சகுணமாகும்போது எட்டுக் குணங்களையுடையதாய் ஐந்தொழில் இயற்றுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !