உடல் உறுப்பு தானம் என்பது, சாஸ்திரங்களில் ஏற்புடையதுதானா?
நிச்சயமாக. பரோபகாரார்த்தம் இதம் சரீரம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் இந்த உடம்பு. இந்த உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்பது புராணங்களிலேயே காட்டப்பட்டுள்ளது. ததீசி மகரிஷி இதற்கு சிறந்த உதாரணம். விருத்தாசுரன் என்ற அசுரனைக் கொல்வதற்காக, இந்திரன் ததீசி மகரிஷியிடம் வந்து, அவரின் திடகாத்திரமான முதுகெலும்பைக் கேட்கிறான். மகரிஷி தியானம் செய்து, அதன் மூலம் தன் சரீரத்தை தியாகம் செய்து, தனது முதுகெலும்பைக் கொடுத்தார் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே, உடல் உறுப்பு தானம் என்பது நிச்சயமாக செய்யலாம். ஆனால், யார் செய்யக் கூடாது என்றால், யாகம் செய்த தீட்சிதர்கள், சோம யாகம் செய்தவர்கள், உடலில் ஒரு தோஷம் இருக்கக் கூடாது. சன்னியாசிகள், யாகம் செய்பவர்கள் கூட பிரச்னையில்லை. தீட்சிதர்கள் அவ்வாறு தானம் செய்யக் கூடாது. அவர்களுக்கு வாழ்வின் இறுதியில் ஒரு யாகம் உண்டு. அதற்கு, அந்த்யேஷ்டி என்று பெயர். இந்த யாகத்தில் உடலையே ஹவிஸாகக் கொடுக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது ஏதேனும் ஒரு தோஷம் இருந்தால், அதனை பகவான் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதற்காக, அங்கஹீனம் ஏதும் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மற்றவர்களுக்கு அது பொருந்தாது. ஞானிகளுக்கு அது பொருந்தாது, ஒரு கட்டத்தில், நாமே தியாகிகள் ஆனால், அதாவது தியாகம் செய்த தீட்சிதர்களாகவே இருந்துவிட்டால் அவர்களுக்கு இந்த தர்மம் பொருந்தாது.