உபநிடதம் என்றால் என்ன?
ADDED :3555 days ago
உபநிடதம் நான்கு வேதப்பிரிவுகளிலிருக்கும் சம்ஹிதை, பிரம்மாணம், ஆரணியகம் என்ற பாகங்களைச் சார்ந்தவை. உபநிஷத் என்பதற்கு ஆசாரியன் அருகில் உட்கார்ந்து அறிந்துகொள்ளப்படும் ஞானம் என்று பொருள்கொள்கிறார்கள். நுற்றெட்டு உபநிடதங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானவை பத்தாகும். அவை வருமாறு: ஐந்ரேய உபநிஷத், தைத்திரீய உபநிஷத், கடோபநிஷத், சுவேதாசுவதர உபநிஷத் பிரஹதாரண்யகோபநிஷத், பிரச்னோப நிஷத், கேநோபநிஷத், ஈசோபநிஷத், முண்டகோபநிஷத், சாந்நோக்கிய உபநிஷத். இந்த பத்து உபநிடதங்களுக்கும் சங்கராச்சாரிய சுவாமிகள் பாஷ்யம் செய்துள்ளார்கள். பின்னர் இராமானுஜர், வித்யாராணயர், ஆனந்த தீர்த்தர் முதலானவர்கள் பாஷ்யம் செய்துள்ளனர்.