உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசத்தில் அறுபத்து மூவர் விழா!

தைப்பூசத்தில் அறுபத்து மூவர் விழா!

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவிடைமருதூரில் உள்ளது அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் தைப்பூசத்தன்று அறுபத்து மூன்று நாயன்மார் உலா விமர்சையாக நடைபெறுகிறது. இங்கு, அம்பாள் சன்னிதிக்கு தென்புறம் அருள்பாலிக்கும் மூகாம்பிகை மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்தியாவில் திருவிடைமருதூரிலும் கர்நாடக மாநிலம், கொல்லூரிலும் மட்டுமே மூகாம்பிகைக்கு சன்னிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சன்னிதியின் முன்பு உயரமான மேரு ஒன்று காட்சி தருகிறது. இதை விளக்குவது, மேருதந்த்ரம் என்பர். சக்தியின் தத்துவமாக இந்த மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதனை வணங்கினால் எல்லா ஆற்றலும் பெறலாம் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !