கடவுள் எனும் முதலாளி!
ADDED :3554 days ago
ஒருவர் காசி யாத்திரை செல்ல வேண்டுமென்று தினந்தோறும் சில நாணயங்களை ஓர் உண்டியலில் போட்டுச் சேமித்து வந்தார். அவர் காசிக்குப் புறப்பட்டபோது உண்டியலில் இருந்த நாணயங்களை ஒரு கடை முதலாளியிடம் கொடுத்து சில ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொண்டார். வாழ்க்கை என்ற பயணத்தில் நாணய மூட்டை போன்ற துன்பங்களை நாம் சுமக்க வேண்டாம்! கடவுள் என்ற முதலாளியிடம் நாம் அந்த மூட்டையைக் கொடுத்து, அருள் என்ற ரூபாய் நோட்டுக்களைப் பெறலாம். இதனால் நமது வாழ்க்கைப் பயணம் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் ஆகிவிடும்.