உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதூரில் தைப்பூச தரிசனம்!

திருவிடைமருதூரில் தைப்பூச தரிசனம்!

தை மாதம் பவுர்ணமி திருநாளுடன் பூச நட்சத்திரம் இணைந்துவரும் திருநாளை தைப்பூச திருநாளாகப் போற்றுவர். திருவிடைமருதூரில் தைப்பூசத்தை கடைநாளாகக் கொண்டு பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் கடைசி  நாளில் திருவிடைமருதூர் பெருமான் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார். தீர்த்தவாரி முடிந்ததும் பெருமான் பதினாறுகால் மண்டபம் ஒன்றில் எழுந்தருள்வார். இந்த மண்டபத்துக்கு பூச மண்டபம் என்றே பெயர். பெருமாள் தீர்த்தம் அளிக்கும் துறை பூசத்துறை என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள பெருநகரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பூசப் பெருந்திருவிழா பத்துநாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாளான தைப்பூசத்தன்று பிரம்மபுரீஸ்வரர் சேயாற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிப்பார். தைப்பூசத் திருநாளையொட்டி முருகன் கோயில்களில் தேரோட்டத்துடன் கூடிய பெருந்திருவிழா நடைபெறுகிறது. குறிப்பாக கொங்கு நாட்டு முருகன் கோயில்களில் நடைபெறும் தைப் பூசத் தேரோட்டம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !