திருமலையானுக்கு விசேஷ பூஜை!
ADDED :3554 days ago
திருமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை விசேஷ பூஜை. இச்சேவை சம்பங்கி பிரதக்ஷணத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை மலையப்ப ஸ்வாமிக்கு நடைபெறுகிறது. பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இச்சேவை 1991 ஏப்ரல் மாதம் 8ம் தேதி தொடங்கப்பட்டு, ஆர்ஜித சேவையாக உள்ளது. திருமலையான் கோயிலில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்யம் ஆன பிறகு இரு தேவிமார்களுடன் மலையப்ப ஸ்வாமி கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். வைகானசாகம சாத்திர முறைப்படி ஹோமங்கள் நிர்வகித்த பின் உத்ஸவ மூர்த்திக்கு (ஸ்நபன) திருமஞ்சனம் நிர்வகிப்பர். இச்சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.