ராஜஸ்தானில் நவராத்திரி!
ADDED :3554 days ago
ராஜஸ்தான் மாநிலத்தில், வீரர்களின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில், அன்னை பராசக்தி ஒவ்வொருவரது வீட்டுக்கும் ஒருமுறையாவது வந்து போகிறாள் என்பது அவர்களது நம்பிக்கை. அதேபோன்று பெண்கள் தங்களுடைய வழிபாட்டுக்கு அம்பிகையின் விக்கிரகம் எதையும் உபயோகிப்பதில்லை. சுவரில் வரையப்பட்ட மந்திரம் ஒன்றையும், ஸ்வஸ்திக் சின்னத்தையுமே அன்னை பராசக்தியாக பாவித்து வழிபடுகிறார்கள்.