இன்ப, துன்பத்திற்கு முற்பிறவியில் செய்த புண்ணியம், பாவம் தான் காரணமா?
ADDED :3551 days ago
ஆம்...முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியம் வைப்புக்கணக்கு போல உள்ளது. இந்த கணக்கை சஞ்சிதம்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. இது தீரும் வரை உயிர்கள் பிறந்தும், இறந்தும் கொண்டே இருக்கும். நமது பாவ, புண்ணியத்திற்கு ப்ராரப்தம்’ என்று பெயர். இதுவே சுருங்கி பிராப்தம்’ என்று பேச்சு வழக்கில் உள்ளது. அவர் பிராப்தம் சந்தோஷமாக இருக்கிறார்’ என்றும், நான் கொண்டு வந்த பிராப்தம் அவ்வளவு தான்... கஷ்டப்படுகிறேன்’ என்றும் சொல்கிறோமே! அதற்கு காரணம் நாம் செய்யும் புண்ணிய, பாவங்கள் தான்.