உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம் பிறந்தது நமக்காக!

உலகம் பிறந்தது நமக்காக!

தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், எல்லாரும் கேட்கும் கேள்வி இதுதான். ஏன் இந்தக் கடவுள் இந்த உலகத்தை படைக்க வேண்டும்? நம்மையெல்லாம் ஏன் வாட்டியெடுக்க வேண்டும்?”. இது நன்றிகெட்டத்தனமான குற்றச்சாட்டு. தேவன் மனிதர்களை படைக்கும்போது, தம்மை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அறிவதற்காக நமக்கு சுதந்திரம் கொடுத்தார். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார். அதே நேரம், தன்னால் படைக்கப்பட்டவன் தன்னை மதிக்கிறானா என்பதை அறிய, ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என விலக்கினார். ஆனால், மனிதன் அதைச் சாப்பிட்டான். இப்போது சொல்லுங்கள், கடவுள் பிரச்னையை உருவாக்கினாரா? மனிதன் பிரச்னையை உருவாக்கிக் கொண்டானா? அவர் மகிழ்வுடன் தந்த அத்தனையையும் விட்டுவிட்டு, அவர் விலக்கியதை சாப்பிடுவானேன்? கடவுள் குடிக்கச் சொன்னாரா? சீட்டாடச் சொன்னாரா? புகை பிடிக்கச் சொன்னாரா? எதுவும் இல்லையே! இத்தகைய வழக்கங்களை உருவாக்கிக் கொண்டவன் மனிதன் தான்! பின் அவரை குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்? இப்படியெல்லாம் நாம் நன்றி கெட்டு, பாவிகளான பிறகும், தேவன் மனித ரூபத்தில் நம்மிடையே வந்தார்.  நம்மைப் பரிசுத்தப்படுத்தினார். அதன்பிறகும், நாம் பாவத்தின் பாதையில் சென்றால் அதற்கு யார் பொறுப்பு? தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்’ (யாக்: 4:8) என்ற வசனம் இங்கே பொருத்தமானதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !