உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடித்தால் கவலை போய் விடுமா?

குடித்தால் கவலை போய் விடுமா?

அந்த வார்த்தை மாம்சமாகி (மனித வடிவம்), கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்’ என்று பைபிளில் ஒரு வசனம் உள்ளது, இதில் வார்த்தை’ என்பது ஆண்டவரின் கட்டளையைக் குறிப்பிடுகிறது. அவர் நமக்கு இட்ட கட்டளைகளை மதித்தால், கவலையே ஏற்படாது. குடிப்பவர்களில் பெரும்பகுதியினரை, ஒரு காலத்தில் கேட்ட போது, “என் மனதிலுள்ள தீராத கவலையை மறக்கவே குடிக்கிறேன்,” என்றார்கள். இன்று அதிக பணவரத்து காரணமாக குடிப்பவர் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களிடம் ஏன் குடிக்கிறீர்கள்?’ என்றால் சந்தோஷத்தைக் கொண்டாட குடிக்கிறோம், டென்ஷனைக் குறைக்க குடிக்கிறோம்’ என்கிறார்கள். ஆனால், இவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தான் போகிறார்கள். குடல் போச்சு. இருதயம் போச்சு. சிறுநீரகம் போச்சு’ என்று கதறுகிறார்கள். சந்தோஷம் போய் விடுகிறது. டென்ஷன் முன்பை விட எகிறுகிறது. இவர்கள் கஷ்டப்படுவதைக் கண்ணால் பார்ப்பவர்களும் குடிக்கிறார்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் கேடுகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவர் சொன்னது போல், சம்பாதிப்பதில் பெரும் பகுதியை, நன்மைக்காக செலவிடுங்கள். ஏழைகளை கை துõக்கி விடுங்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் கேடுகளை விலை கொடுத்து வாங்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !