கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா
ADDED :3149 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி உற்சவ திருவிழா, கடந்த, 16 முதல், வரும், மார்ச், 2 வரை நடக்கிறது. முன்னதாக, கட்டளைதாரர்கள் சார்பில், நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில், அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று நடந்த கட்டளை நிகழ்ச்சியில், கிளி வாகனத்தில் வந்த அம்மன், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.