உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் மாசி திருவிழாவில் திருவிளக்கு பூஜை

காளியம்மன் கோவில் மாசி திருவிழாவில் திருவிளக்கு பூஜை

சேலம்: மாசி திருவிழாவையொட்டி, பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். சேலம், நெத்திமேடு, தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இரவு, 9:00 மணிக்கு, அம்மனுக்கு பூச்சாட்டி, பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். நேற்று மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில், காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, பெண்கள் பலர், வேத மந்திரங்கள் முழங்க, திருவிளக்கு பூஜை செய்து, அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !