உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு விழாவுக்கு 4,991 பேர் பயணம்

கச்சத்தீவு விழாவுக்கு 4,991 பேர் பயணம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு சர்ச் விழாவுக்கு, ராமேஸ்வரத்தில் இருந்து, 4,991 பேர், படகில் பயணம் செய்ய உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ.,யில், பாக் ஜலசந்தி கடலில், கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் அமைந்துள்ளது. இந்த சர்ச்சில், இந்தாண்டு மார்ச் 11, 12ல் நடக்கவுள்ள திருவிழாவில், இந்திய - இலங்கையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், படகில் சென்று பங்கேற்க உள்ளனர். கச்சத்தீவு விழாவுக்கு செல்லும் தமிழக பக்தர்கள், ராமேஸ்வரம் பாதிரியாரிடம் விருப்ப மனு கொடுத்தனர். ஒருநபருக்கு படகு, விண்ணப்ப படிவ கட்டணமாக, 1,300 ரூபாய் வசூலித்தனர். இதில், ஆண்கள், 3,610, பெண்கள், 1,118, குழந்தைகள், 263 பேர் என, மொத்தம், 4,991 பேர், 143 விசைப்படகுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள், மார்ச் 11ல், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் கச்சதீவுக்கு செல்வர். அங்கு திருவிழா முடிந்து, மார்ச் 12 மதியம், ராமேஸ்வரத்திற்கு திரும்புவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !