ஆனந்தாயி கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED :3149 days ago
இடைப்பாடி: ஆனந்தாயி கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இடைப்பாடி அருகே, ஒட்டப்பட்டியில் உள்ள ஆனந்தாயி ஸ்ரீஅங்காளம்மன் சுவாமியின், மாசி மாத உற்சவம், கடந்த, 10ல் துவங்கியது. நேற்று முன்தினம், தீ மிதி விழா நடந்தது. தொடர்ந்து, மயானக்கொள்ளை, சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று, தெப்பத்திருவிழாவில் ஊஞ்சல் சேவை நடந்தது. அதில், தெப்பக்குளத்தில் இருந்து, ஆனந்தாயி அங்காளம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.