உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதிப்பு உயர என்ன செய்வது?

மதிப்பு உயர என்ன செய்வது?

ரிப்லி என்பவர் எழுதிய நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகத்தில் உள்ள தகவல் இது. ஒரு இரும்புத்துண்டின் விலை 5 டாலர். அதையே குதிரையின் லாடமாக வடித்ததும் 50 டாலராக விலை உயர்ந்து விடுகிறது. தையல் இயந்திரமாக வடிவமைத்தால் 500 டாலராக கூடுகிறது. ஸ்விஸ் வாட்சின் மெல்லிய ஸ்பிரிங்காக மாற்றினால் 5000 டாலராக ஏறிவிடுகிறது. ஆக, 5 டாலர் மதிப்புள்ள ஒரு பொருள், அதை பதனிட்டு வேறு பொருளாக மாற்றும்போது விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதுபோல நமக்கும் ஆண்டவர் ஆற்றலைத் தந்துள்ளார். அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். அவர் பைபிள் மூலமாக நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி வலியுறுத்தியுள்ளார். அந்த அறிவுரைகளைப் பின்பற்றினால், நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மையாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !