உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி அய்யப்பன் கோவிலில் 108 பால் குடம் அபிஷேகம்

ஆதி அய்யப்பன் கோவிலில் 108 பால் குடம் அபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஆதி அய்யப்பன் கோவிலில், 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அருகே க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி அய்யப்பன் கோவிலில், நேற்று முன்தினம் ஆங்கில மாத பிறப்பையொட்டி, இரவு, 7:00 மணிக்கு, அரிபுத்திர சுவாமிகள் தலைமையில் நடை திறக்கப்பட்டு, 27 நட்சத்திர யாக குண்ட சாலையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் ஆதி அய்யப்பன் சிலைக்கும், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, 108 பெண்கள் பால் குடம் ஏந்தி வந்து, 27 அடி உயர மணிகண்டன் சுவாமி பாதத்தில் அபிஷேகம் செய்து செய்து வழிபட்டனர். இதில், சுற்றிப்பகுதி கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி அய்யப்பனின் மகிமை குறித்து, அரிபுத்திர சுவாமிகள் சொற்பொழிவாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !