கோவையில் சிவனடியார்கள் மாநாடு ஏப்., 21, 22, 23 தேதிகளில் நடக்கிறது
ADDED :3138 days ago
கோவை: கோவை கவுமார மடாலயத்தில், வரும் ஏப்ரலில் சிவனடியார்கள் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற ஆதினங்களில், கோவை சிரவையாதீனமும் ஒன்று. இதில் கவுமார மடாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏப்., 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் சிவனடியார்கள் மாநாடு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இருந்து, ஏராளமான சிவனடியார்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் பங்கேற்கவுள்ளனர். மாநாடு ஏற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம் மற்றும் பந்தல்கால் நடும் நிகழ்ச்சிகள் நேற்று, கவுமார மடாலயத்தில் நடந்தன. காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. பேரூராதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், சிரவையாதினம் குமரகுருபர அடிகளார் பந்தல்கால் நட்டனர். கூடியிருந்த சிவனடியார்கள், ’ஓம் நமச்சிவாய’, ’ஓம் நமச்சிவாய’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.