உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலம்பூர் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நீலம்பூர் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார் : நீலம்பூர் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சூலுார் அடுத்த நீலம்பூரில் புதிதாக வெற்றி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை, கணபதி பூஜையுடன் துவங்கியது. கும்ப ஸ்தாபனம், முதல் கால ஹோமம் நடந்தது. விநாயகருக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது.நேற்று அதிகாலை இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, புனிதநீர் கலசங்கள் கோவிலை சுற்றி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, வெற்றி விநாயகருக்கு கும்பாபிஷேம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !