வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா துவக்கம்
ADDED :3138 days ago
திருக்கோவிலுார் : வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ 10 நாட்கள் நடைபெறும் மாசிமகப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை. கலச ஸ்தாபனம், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், ரிஷபக்கொடி பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு‚ கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது. சோமாஸ்கந்தர்க்கு சோடசோபப்சார தீபாராதனை, நவசந்திகள் ஆவாஹணம் செய்து பலிபூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஆலையம் வலம்வந்தது. பஞ்சமூர்த்திகள் அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா நடந்தது.