உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறகளூரில், அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

ஆறகளூரில், அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

தலைவாசல்: ஆறகளூரில், அங்காளம்மன் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. தலைவாசல், ஆறகளூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில், மாசி மாத திருவிழா, கடந்த, 26ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி உள்பட, பல்வேறு அலங்காரத்தில், சுவாமி, தினமும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, வாழை, இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகளில் வலம் வந்த அம்மனை, ஏராளமானோர் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !