கோவையில் பாகவத உற்சவம் நிகழ்ச்சி
கோவை : பாகவத உற்சவம் நிகழ்ச்சி இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.இஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கை:புரட்டாசி மாதம் பாசாங்குஷ ஏகாதசியை தொடர்ந்து வரும் பவுர்ணமி முதல் உத்தாண ஏகாதசியை அடுத்து வரும் பவுர்ணமி வரையிலான மாதத்தில், பகவான் கிருஷ்ணரை அன்னை யசோதா உரலில் கட்டிய லீலை நடந்ததால், வைஷ்ணவர்கள் இம்மாதத்தை தாமோதர மாதமாக அழைக்கின்றனர். ஆண்டின் 12 மாதங்களில் இம்மாதமே பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் எவரொருவர் பகவான் ஸ்ரீஹரியின் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபடுகின்றாரோ அவருக்கு முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் யாவும் தீர்ந்துவிடும் என நம்பப்படுகிறது.தாமோதர மாதம் முன்னிட்டு இஸ்கான் ஹரே கிருஷ்ண இயக்கம் சார்பில் கோவையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் ஒருபகுதியாக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் இன்றும், நாளையும் காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை இந்தியிலும், மாலை 5.00 முதல் இரவு 9.00 மணி வரை ஆங்கிலத்திலும் பாகவத உற்சவம் நடக்கிறது. இத்துடன், கிருஷ்ண கீர்த்தனைகள் தமிழில் தாமோதர லீலா குறித்த சிறப்பு சொற்பொழிவு, பஜனைகள், உபன்யாசம், வீடியோ ÷ஷா, பக்தர்கள் அனைவரும் நெய் தீபம் ஆராதனை செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.விபரங்களுக்கு, 98422 52308, 98428 15108 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.