மனித உடலை கடவுள் குடியிருக்கும் கோவில் என்று கூறுவது சரிதானா?
ADDED :3536 days ago
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்பது திருமூலர் திருமந்திரம். நமது உடம்பே ஆலயம். உள்ளமே கருவறை. உயிரே சிவலிங்கம். ஐம்புலன்கள் தீபங்கள் என்பது அப்பாடலின் பொருள். எனவே நமது உயிராக இறைவன் இருப்பதால், இந்த உடலே அவன் குடியிருக்கும் கோவில் என்பதில் சந்தேகமில்லை.