உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு பாரதீ தீர்த்த சுவாமி வருகை

மதுரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு பாரதீ தீர்த்த சுவாமி வருகை

மதுரை;மதுரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி ஆகியோர் மார்ச் 27ல் வருகின்றனர். அவர்கள் ஏப்., 4 வரை தங்கியிருந்து ஆசி வழங்குவர். தர்மாதிகாரி சங்கரநாராயணன் கூறியதாவது: பாரதீ தீர்த்த சுவாமி 1975 முதல் ஆறு முறை இங்கு வந்துள்ளார். மார்ச் 27ல் மதுரை வரும் இருவருக்கும் சிருங்கேரி சங்கர மட வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஏப்., 2ல், பாரதீ தீர்த்த சுவாமியின் 67வது பிறந்த நாளையொட்டி, மார்ச் 30 முதல் ஏப்., 3 வரை மகாருத்ரம் மற்றும் சதசண்டீ யாகங்கள் நடக்கின்றன. ஏப்., 3ல் மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் செய்து விட்டு, மறு நாள் வரை அம்மன் சன்னிதி தெருவில் உள்ள ஸ்ரீ மடத்தில் தங்கியிருப்பர். ஏப். 4ல் ராஜபாளையம் செல்வார், என்றார். நிர்வாகி சீனிவாசராகவன், முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், செய்தி தொடர்பாளர் பாரதிப்ரியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !