இணையதளத்தில் புது பிரிவு : அறநிலையத்துறை அறிமுகம்
ADDED :3163 days ago
அறநிலையத்துறை இணையதளத்தில், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக கோவில்களின் நிகழ்வுகள், திருவிழாக்கள், வழிகாட்டி, ஓலைச்சுவடி, ஆகமம் போன்றவை குறித்த தகவல்கள் உள்ளன. தற்போது, ’இணைய சுற்றுலா’ என்ற தலைப்பில், புதிய பகுதி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது: இணைய சுற்றுலா பகுதியில், முதல் கட்டமாக, திருவண்ணாமலை, தஞ்சை, பழநி, காஞ்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்துார், நாகை, நெல்லை கோவில்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோவில்களின் வரலாறு, இ - சேவை, பூஜை நேரம், திருவிழாக்கள், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக கோவிலை, 360 டிகிரி கோணத்தில் பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -