ராஜகுளம் தெப்போற்சவம் கோலாகலம்
ADDED :3247 days ago
ராஜகுளம் : ராஜகுளத்தில், வரதராஜப்பெருமாள் தெப்போற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமியன்று, காஞ்சி வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். 24ம் ஆண்டு தொப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காஞ்சி வரதராஜப் பெருமாள், கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, நத்தப்பேட்டை வழியாக வையாவூர், கவுரியம்மன்பேட்டை, ராஜ குளம் வந்தடைந்தார்.இதையடுத்து, மூவரும், மீண்டும் கண்ணாடி பல்லக்கில் சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, பழைய இலுப்பப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று, மாலை ராஜ குளம் உற்சவ மண்டபத்தை வந்தடைந்தனர். மூவருக்கும், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு மலர் அலங்காரத்தில், காஞ்சி வரதராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.