உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துரோண புஷ்பம்!

துரோண புஷ்பம்!

விநாயக சதுர்த்தி அன்று தும்பைப் பூவால் விநாயகரை அர்ச்சித்தால், அச்சம் அகன்று சுகமான வாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம். வடமொழியில் தும்பைப்பூவை துரோண புஷ்பம் என்று அழைப்பார்கள். சிவபெருமான் விருப்பத்தோடு தும்பை மலர்களைத் தன் உச்சந்தலையில் சூடி இருக்கிறார். இதனால் மேலான சிறப்பைக் கொண்டிருக்கிறது தும்பைப்பூ. தும்பைப்பூ அளவில் சிறியது. தூய வெண்ணிறமும் ஒற்றை இதழும் கொண்டது. இதனால் பூஜையில் விசேஷ இடத்தைப் பிடித்திருக்கிறது. வீராவேசத்துடன் போர் புரிபவர்கள் தும்பைப் பூவைச் சூடினர். எனவே, இதை போர்ப்பூ என்றும் அழைப்பர். அதிரப் பொருவது, தும்பை என்கிறது ஒரு பழம் பாடல். வெற்றியை மட்டுமே கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு உரியதாக தும்பைப்பூ கருதப்படுகிறது. இதனால் தும்பைப் பூவை வீரத்தின் அடையாளமாகக் கொண்டிருந்ததை அறியமுடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !