உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதத்தின் போது உடல்நலக்குறைவால் தடங்கல் பட்டால் பலன் கிடைக்காதா?

விரதத்தின் போது உடல்நலக்குறைவால் தடங்கல் பட்டால் பலன் கிடைக்காதா?

விரதம் இருப்பதற்கு, சாஸ்திரங்களில் சில விதிகள் சொல்லப்பட்டிருக்கிறது. வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் இவர்கள் விரதம் இருக்கும்போது சிலவற்றை உண்பதற்கு சாஸ்திரங்கள் அனுமதி கொடுக்கிறது. விரதம் என்பது உபவாசம் இருப்பது. எட்டு விதமான உணவு பதார்த்தங்களைச் சாப்பிட்டால், அந்த விரதமானது பங்கப்படாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அஷ்டௌதானி அவ்ரதக்னானி- விரதங்களை அது கொடுக்காது. ஜலம், பால், நெய், பொரி, கிழங்கு, பழங்கள், மருந்து, குருவின் வசனம் இவை எட்டும் அந்த விதி விலக்குகள். ஏகாதசியன்று இருப்பினும் குரு அழைத்து சாப்பிடு என்று சொன்னால், அதனை சாப்பிட வேண்டும். குருவின் வாக்யத்துக்கு அவ்வளவு மகிமை உண்டு. இவை விரதத்தைப் பங்கப்படுத்தாது என்பது சாஸ்திரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !