உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலபைரவர் கோவிலில் வரும் 20ல் அஷ்டமி பூஜை

காலபைரவர் கோவிலில் வரும் 20ல் அஷ்டமி பூஜை

ஊத்துக்கோட்டை : காலபைரவர் கோவிலில், வரும், 20ல், திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது, காலபைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். மேலும், விடுமுறை நாட்களில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து, சுவாமியை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், வரும், 20ம் தேதி, திங்கட்கிழமை மாலை, 5:00 மணிக்கு, தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளது. அப்போது சுவாமிக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !