ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3116 days ago
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்,ரங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர நாளான ஏப். 9 காலை 7:00 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது. இரவு 7 :00 மணிக்கு கோயில் முன்பு அமைந்துள்ள ஆடிப்பூர பந்தல் கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நிறைவு நாளான ஏப். 13 மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் புஷ்ப யாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, திருக்கோயில் பட்டர்கள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.