உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரக்கணக்கான தீப்பந்தம் ஏற்றி அம்மன் கோவிலில் 6ல் வழிபாடு

ஆயிரக்கணக்கான தீப்பந்தம் ஏற்றி அம்மன் கோவிலில் 6ல் வழிபாடு

கொடுமுடி: ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் ஏற்றி அம்மன் கோவிலில் வரும், 6ல் வழிபாடு நடக்கிறது. சிவகிரி அருகே, தலையநல்லூரில் பொன் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன தொடங்கியது. இதை தொடர்ந்து நாள்தோறும், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடக்கிறது. வரும், 5ல் பொங்கல் வைபவம் நடக்கிறது. இதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்வர். கோவிலில் பிரசித்தி பெற்ற, ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி, 6ல் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை, 3:?? மணி அளவில் குதிரை துளுக்குப்பிடித்தல் நிகழ்ச்சி, அதன் பின்னர் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. அப்போது வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி, அம்மனை வழிபடுவர். அம்மன் மீண்டும் கோவிலை வந்தடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை அம்மன் வசந்த மண்டபம் புறப்படுதல், வண்ணாரக்கருப்பண சுவாமி பொங்கல் விழா நடக்கும். மறுநாள் (7ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏப்.,8ல் அம்மன் திரு வீதி உலாவுடன், அம்மன் மீண்டும் சிவகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு புறப்படும் நிகழ்ச்சியோடு, பொங்கல் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !