உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஆதிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஓசூர்: தளி அருகே, ஆதிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த, தளி அருகே உள்ள ஆரோப்பள்ளி - தாசரப்பள்ளி இடையே, ஆதிநாராயண சுவாமி கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 9:00 மணிக்கு, 108 கலசங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு அம்மன் பல்லக்கு உற்சவம் நடந்தது. இன்று (ஏப்., 1) மதியம், 12:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !