பருவமழை வேண்டி நாளை பிரார்த்தனை
ADDED :3118 days ago
நாமகிரிப்பேட்டை: பருவமழை வேண்டி, நாமக்கல் மாவட்டத்தில், 108 கோவில்களில் கூட்டு பிரார்த்தனை நடக்கவுள்ளது. நாமக்கல் மாவட்டம் தர்ம ரஷன சமிதி, இந்து சமய பேரவை ஆகியவை இணைந்து பருவமழை வேண்டி, 108 கோவில்களில் நாளை காலை, 9:00 மணி முதல், 10:00 மணிவரை கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. மோகனூர் ஒன்றியத்தில், 25 கோவில்கள்; நாமக்கல், 10; நாமக்கல் நகராட்சி, 12; புதுச்சத்திரம், 10; வெண்ணந்தூர், 5; ராசிபுரம், 10; ராசிபுரம் நகராட்சி, 10; நாமகிரிப்பேட்டை, 5; சேந்தமங்கலம், 10; கொல்லிமலை, 1; எருமப்பட்டி, 10 ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. கூழ் ஊற்ற விரும்பும் பக்தர்கள் கூழ் தயாரித்து குறிப்பிட்ட கோவில்களுக்கு காலை, 8:30 மணிக்கு வரவேண்டும் என, விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.