உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா வரும் 4ல் துவக்கம்

மாரியம்மன் திருவிழா வரும் 4ல் துவக்கம்

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம் அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவில், ஐந்தாம் ஆண்டு தீ மிதி விழா, வரும், 4ல் துவங்குகிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு கன்னி பூஜை, இரவு, 9:00 மணிக்கு சுவாமி குடி அழைத்தல் நடக்கிறது. 5ல், காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைத்தல், உருளுதண்டம், கோழி பலியிடுதல் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு பூங்கரகம், அலகுகுத்துதல், மாவிளக்கு எடுத்தல், மாலை, 4:00 மணிக்கு தீ மிதித்தல், இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறும். 6ல், இரவு, 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் சுவாமி ஊர்வலம், 7ல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !