திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் ௪ம் ஆண்டு பங்குனி உத்திர விழா
ADDED :3120 days ago
திண்டிவனம்: திண்டிவனம் பாலமுருகன் கோவிலில் 40ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 40 ஆம் ஆண்டு
பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 7ந்தேதி பால வினாயகர், பாலமுருகருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் கணபதி ஹோமம், சமர்த்தனை பூஜைகள் நடந்தது.பங்குனி உத்தரத்தை முன்னிட்டு, நேற்று பிற்பகல், பாலமுருகன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்காவடி, செடல், பூந்தேர், வேல்பூஜை செய்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து
வீதியுலா நடந்தது. விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.