சக்கத்தா மாரியம்மன் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி : கோத்தகிரி சக்கத்தா மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. கோத்தகிரி - - மேட்டுப்பாளை யம் சாலையில் அமைந்துள்ள சக்கத்தா மாரியம்மன் திருவிழா, கடந்த, 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்துவந்த நிலையில், 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, பஜனையுடன் அம்மன் அழைப்பு நடந்தது. 11ம் தேதி, முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் ஊர்வலமாக வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. முக்கியத் திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, கிராம கோவிலில் தேர்
வடம் பிடித்தல் நிகழ்ச்சியை, அடுத்து, சக்கத்தா கிராமத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், வண்ண குடைகளின் கீழ், அரவேனு பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தார். இன்று, பகல், 2:00 மணிக்கு, அம்மனின் சிங்க வாகன திருவீதி உலாவும், இதனை தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. வருகிற, 17ம் தேதி, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.