ஆண்டவரே வெற்றி பெற்றார்
உங்கள் சத்ருக்களை (எதிரி)சிநேகியுங்கள். நன்மை செய்யுங்கள்,” என்கிறார் இயேசு. அதற்கு உதாரணமான சம்பவம் இது. உலகை வெல்ல நினைத்த அலெக்சாண்டர் பல நாடுகளை தன் வசப்படுத்தினார். அவரை ஒரு அறிஞர் சந்தித்து, “பலநாட்டு அரசர்கள் பலசாலிகளாக இருந்தாலும், அவர்களெல்லாம் உங்களைப் போல சிறப்பான வெற்றிகளைப் பெற முடியவில்லை. ஆனால், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? இதற்கு உங்கள் மனஉறுதியுடன் வேறு சில காரணங்களும் இருக்க வேண்டும். அவற்றைத் தெரிந்து கொள்ளலாமா?” என்றார். அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில்: “இது எனது வெற்றியல்ல, ஆண்டவரின் வெற்றி. அவர் அருளாலேயே வெற்றி பெற்றேன். அது மட்டுமல்ல, எந்த நாடுகளை ஜெயித்தேனோ, அந்த நாட்டு மக்களுக்கு முந்தைய மன்னர்கள் செய்து கொடுத்ததை விட அதிக வசதி செய்து கொடுத்தேன். இதனால், மக்கள் என்னை எதிர்க்கவில்லை. இதற்கெல்லாம் மேலாக நான் வென்ற மன்னர்களை நண்பர்கள் போல் நடத்தி மரியாதை கொடுத்தேன். இவையே என் வெற்றியின் ரகசியம்,” என்றார். எதிரிகளையும் நண்பர்களாக்கும் பக்குவம் பெறுவோம்.