உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடை விஷயத்தில் கவனம்

ஆடை விஷயத்தில் கவனம்

பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் வரையறுத்துள்ளது. “நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளரின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் (சேலை) முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,” என்கிறது.ஒரு பெண் அலங்காரம் செய்து கொண்டால் தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள், வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள் மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராயினும் அவர்கள் முன்பு பர்தா அணிய வேண்டும். ஆண்களிடம் இருந்து அவளது மானத்தைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !