ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம்
ADDED :3130 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஆதிகேசவப்பெருமாள் கோவில் பிரம்மோற்ச விழாவில், நேற்று காலை சூர்ணாபிஷேகமும், மாலை யானை வாகன புறப்பாடும் நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நான்காவது நாளான நேற்று காலை, ஆதிகேசவப்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மாலை யானை வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.