சிறந்த வீடு எது?
ADDED :3485 days ago
யாருடைய ஆதரவும் இல்லாமல் அனாதையாக வாழ்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்கள் தங்கள் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லக்கூட, யாரும் இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களைப் பேணுவது முக்கிய கடமை, என்கிறார் நபிகள் நாயகம். எந்த வீட்டில் ஒரு அனாதை இருந்து, அவருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளப்படுகிறதோ, அதுவே வீடுகளிலேயே மிகச்சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அனாதை இருந்து அவனுடன் மோசமாக நடந்து கொள்ளப்படுகிறதோ, அதுவே வீடுகளிலேயே மிகக்கெட்ட வீடாகும், என்கிறார் அவர். அனாதைகளை அன்புடன் நடத்துவோம். அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்வோம். பாசத்தைப் பொழிந்து, நம் குடும்பத்தில் ஒருவராக்குவோம். அவர்களின் தலையை இரக்கத்துடன் தடவுவோம். அவர்களுக்கு உணவளிப்போம். இறைவனுக்கு பிடித்தமானவராக வாழ்வோம்.