உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கோ பூஜை

மழை வேண்டி கோ பூஜை

ஜலகண்டாபுரம்: சன்னியாசி முனியப்பன் கோவிலில், மழை வேண்டி, வருண யாகம் மற்றும் கோ பூஜை நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த சூரப்பள்ளியில், கடும் வறட்சியால் தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் கருகிவிட்டன. மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். கால்நடைகளுக்கும் தீவனம் கிடைக்கவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் பலர், சூரப்பள்ளி சன்னியாசி முனியப்பன் கோவிலில், நேற்று, மழை  வேண்டி, கணபதி, சுதர்சன, நவக்கிரகம் மற்றும் வருண யாகங்கள் நடத்தினர். பின், 13 பசுக்களை கோவில் முன் நிறுத்தி, கோ பூஜை செய்தனர். இதில், சுற்றுவட்டார விவசாயிகள் பலர், வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !