உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் வைகாசி விசாக விழா

சோலைமலை முருகன் வைகாசி விசாக விழா

அழகர்கோவில், அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயில் வைகாசி விழா மே 29ல் துவங்கியது. தினமும் காலையில் பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அப்பன்திருப்பதி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். முருகனுக்கு பால் உட்பட 16 வகையான வாசனை திரவியங்களின் அபிஷேகங்கள் நடந்தன. மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் தங்க ஊஞ்சலில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !